தாபனப் பிரிவு.
குளியாப்பிடிய கிழக்கு பிரதேச செயலகத்திற்கு எப்படி வருகை தரமுடியும்?
- குளியாப்பிடி - குருநாகல் (998) வீதியில் ஹொரம்பாவ பிரதேசத்தில் குளியாப்பிடிய கிழக்கு பிரதேச செயலகம் அமைந்துள்ளது.
கிராம நிலதாரிப்பிரிவுகளின் எண்ணிக்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளல்.
- இப்பிரிவில் 45 கிராம நிலதாரிப்பிரிவுகள் காணப்படுகின்றன.
வியாபாரப் பதிவின் போது உரிமையாளர் சமூகமளித்தல் வேண்டுமா?
- குறித்த விடயம் தொடர்பில் வியாபார உரிமையாளர் கட்டாயம் சமூகமளித்தல் வேண்டும் என்பதுடன் அவர் தனது தேசிய அடையாள அட்டையையும் எடுத்து வருதல் வேண்டும்.
இறந்தவரொருவரின் வங்கியிலிருக்கும் பணம் மற்றும் ஈடு வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளும் போது எடுத்து வரவேண்டியவை எவை?
- இறந்தவரின் மரணச் சான்றிதழ்.
- விண்ணப்பதாரருக்கு இருக்கும் உறவு முறை தொடர்பான ஆவணம் (பிறப்புச்சான்றிதழ், விவாகச்சான்றிதழ்)
- வேறு அங்கத்தவர்கள் இருப்பின் விண்ணப்பதாரருக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்குவது தொடர்பில் அவர்களது எவ்வித எதிர்ப்பும் இல்லை என்பது பற்றிய சத்தியக் கடதாசி , தேசிய அடையாள அட்டை
விஷேட சேவைப் பிரிவு.
கர்ப்பிணித் தாய்மார்க்கு வழங்கப்படும் ரூபா 20000/= போசனைக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வது எப்படி?
- கர்ப்பமுற்று மூன்று மாதங்களைத் கடக்க முன் நீங்கள் செல்லும் மருந்து நிலையத்திற்கு உறித்தான பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஆரம்ப குழந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் அல்லது இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்திரடமிருந்து விண்ணப்ப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
கல்வி உதவிகளைப் பெற முடியுமானவர்கள் யார்?
- குழந்தைகளின் தந்தை இறந்திருந்தால் அல்லது குணப்படுத்த முடியாத நோயொன்றினால் பாதிக்கப்பட்டிருந்தால் பாடசாலை செல்லும் குழந்தைகள் தொடர்ந்தும் புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
அரச சார்பற்ற அமைப்பொன்றை பதிவு செய்வது எப்படி?
- ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை தாண்டிய அரச சார்பற்ற அமைப்புக்களின் ஆவணங்களை வழங்கினால் பதிவு செய்யப்படும்.
{sliderசமுர்த்திப் பயன்களை புதிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.? |closed}
- தற்போதைக்கு புதிய பயனாளிகள் தெரிவு செய்யப்படமாட்டார்கள் என்பதுடன் எதிர்காலத்தில் கவனத்திற் கொள்வதற்கான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும்.
பதிவாளர் பிரிவு.
பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழின் பிரதியொன்றை பெற்றுக் கொள்வது எப்படி?
- பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழின் இலக்கமும் திகதியும்தெரியுமாயின் ரூபா 100/=யும் ,
- பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழின் இலக்கம் திகதி தெரியா விடின் ரூபா 200/=உம் பிரதேச செயலகத்துக்குச் செலுத்திப் பெற்றுக் கொள்ள முடியும்.
- இங்கு கொழும்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பிறப்பு அல்லது இறப்பு அல்லது விவாகம் ஒன்றாயின் மாத்திரம் கொழும்பு பிரதேச செயலகத்தில் உரிய சான்றிதழொன்றை பெற்றுக்கொள்ளலாம்.
பிறப்பொன்றைப் பதிவு செய்வது எப்படி?
- சாதாரண பிறப்பொன்றை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த தினத்திலிருந்து 3 மாத காலப்பகுதியினுள் குறித்த பிரிவின் பிறப்பினைப் பதிவுசெய்யும் பதிவுக்காரர் ஒருவரை சந்தித்து பிறப்பினை பதிவுசெய்து கொள்ளுதல் வேண்டும்.
- மூன்று மாதங்களின் பின் பிறப்பொன்றைப் பதிவு செய்வதாயின் மேலதிக மாவட்ட பதிவாளரை தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும்.
ஓய்வூதியப் பிரிவு.
சிவில் ஓய்வூதியக்காரர் இறந்ததன் பின் விதவை அநாதைகள் ஓய்வூதியத்தை தயார் படுத்திக் கொள்வது எப்படி?
- ஆரம்பமாக ஓய்வூதியக்காரரின் மரணச் சான்றிதழைப் பெற்று ஓய்வூதியத்தை நிறுத்துதல்.
- மேலதிகமாகப் பணம் இருப்பின் அதனைப்பெற்றுக் கொள்வதற்காக வங்கிக்குக் கடிதம் அனுப்புதல்.
- அதன் பின் குறித்த நபருக்கு பின்வரும் ஆவணங்களை எடுத்துவருமாறு அறிவித்தல்.
-
- ஓய்வூதியக் காரரின் இறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
- விதவையின் பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி.
- விவாகச் சான்றிதழின் மூலப்பிரதி.
- விதவையின் வங்கிப் புத்தகத்தின் நிழற்பிரதி.
- விதவையின் தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி.
- விதவைகள் அநாதைகள் அட்டையின் நிழற்பிரதி அல்லது விதவைகள் அநாதைகள் அட்டையின் இலக்கம்.
- கிராம நிலதாரியினால் சான்றுப்படுத்தப்பட்ட கடவுச் சீட்டுக்கான அளவான ஒரு வர்ணப் புகைப்படம்.
- மேலேயுள்ள ஆவணங்கள் அனைத்தினதும் நிழற்பிரதிகள் கிராம நிலதாரியினால் சான்றுப்படுத்தப்படல் வேண்டும்
- இதனைத் தொடர்ந்து அவர்களால் அனைத்துத் தகவல்களும் வழங்கப்பட்டதன் பின் கோவையை எடுத்து விதவை அநாதை ஓய்வூதியத்தை தயார்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல்.
ஓய்வூதியக்காரரின் ஓய்வூதியத்தை நிறுத்தியிருப்பது ஏன்?
- குறித்த வருடத்தில் உயிர் வாழல் சான்றிதழைப் பெற்றுக் கொடுக்காமையின் காரணமாக ஓய்வூதியத்தை நிறுத்தியிருத்தல்.
- ஓய்வூதியக்கார் வருகை தந்து உயிர் வாழல் சான்றிதழைப் பெற்றுக் கொடுத்தலும் அதனை கிராம நிலதாரியினூடாக உறுதிப்படுத்தி எடுத்து வருமாறு ஏவுதலும்.
- பின்னர் உயிர் வாழல் சான்றிதழைப் பெற்றுக் கொடுக்கப்பட்ட பின்னர் ஓய்வூதியத்தை இன்றைப்படுத்தல்.
விதவை /தபுதாரன் இறந்ததன் பின் ஓய்வூதியத்தை பின் உரித்தானவர்களுக்கு வழங்காதிருப்பது ஏன்?
- விதவைகள் அநாதைகள் ஓய்வூதியச் சட்டத்திற்கு ஏற்ப விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத்திற்கு உரிமைகோரும் நபர்கள் இறந்ததன் பின் குறித்த நபருக்கு உரித்தான தொகையொன்று அல்லது நிலுவைத் தொகையொன்று இருப்பின் அந்தத் தொகையை அவர்களது பின் உரித்தானவர்களுக்கு செலுத்துவது தொடர்பில் சட்ட ஒதுக்கம் ஒன்றும் இல்லாமல் காணப்படுகின்றது.
















