நோக்கு

"மனித நேயமிக்க மக்கள் / பொதுச் சேவைக்கு  அர்ப்பணிப்புடன் கூடிய அரச சேவையை ஏற்படுத்துதல்"

 பணிக்கூற்று

 "அரச கொள்கைகளுக்கேற்ப சேவையை வழங்கல், வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் மக்கள் பங்களிப்புடன்  கூடிய வினைத்திறன் மிக்க நிலையான திட்டமிடப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளினூடாக பிரதேச மக்களின் வளங்க​ளை மேம்படுத்துதல் எமது பணியாகும்"  

குளியாப்பிடிய கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு

அறிமுகம்                                                              

 வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பழைய இராசதானிகளுள் ஒன்றான தம்பதெனிய இராசதானியில்  குளியாப்பிடிய  கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவு பரந்து காணப்படுகின்றது. இப் பூமியின் பிரமாணம் 121.36 சதுர கிலோ மீற்றர்களாகும். அங்கு சுமார் 59502 பேர் வாழ்கின்றனர். இதனது வரலாற்றுத் தொடர்பு பண்டுவஸ்நுவர மகாபரகும்பாவின் காலம் வரை நீண்டு செல்கின்றது. தம்பதெனிய காலத்தில் புத்தளம், சிலாபம் வரை நீண்டு செல்லும் கடலோரப் பிரதான பாதை இந்தப் பிரதேசத்தினூடாக  அமைந்திருந்தது என்பதற்கான தடயங்கள் காணப்படுகின்றன. பனாவிட்டி அம்பலம்,  கரகஹகெதர அம்பலம் என்பன இன்றும் அழிவுக்குற்படாது காட்சியளிக்கின்றன என்பதுடன் அவை சமகால வரலாற்றுத் தடயங்களாக விளங்குகின்றன. ருவன்கிரிகந்த  ஆரண்ய (வனவாசஸ்தலம்) இப்பிரதேச செயலாளர் பிரிவின் கிழக்குப்பிரதேச  எல்லையாக அமைந்து காணப்படுகின்றது. சுமார் 75 ஏக்கர்களைக் கொண்ட ருவன்கிரிகந்த ஆரண்யவில் சுமார் 8 பிக்குகள் வாழ்கின்றார்கள். பண்டைய காலத்தில் இந்த ஆரண்ய "ஸ்வர்ண பப்பத",  ”ரத்ன கிரி பப்பத" எனும் பெயர்களால்  அழைக்கப்பட்டன.         

                                                       

இந்த பிரதேச செயலாளர் பிரிவு விவசாயத்திற்கு  உகந்த  பௌதீகத் தடயங்களைக் கொண்டுள்ளன. பல்வேறு விவசாயப் பயிர்கள் இங்கு பரந்து காணப்படுவதுடன் மரக்கறி, பழவகைகள் உற்பட ஊடுபயிர்களின்  பயிர்ச் செய்கை, வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை, பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை, தென்னைப் பயிர்ச் செய்கை என்பன பிரதான இடத்தைப் பிடித்திருக்கின்றன. அவ்வாறே இயற்கை வளங்களை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை  இங்கு பரவலாகக் காணமுடியும்.                                                                                                                                                                                     கருங்கல், செங்கல், மட்பாண்டங்கள், தென்னங்கம்பு ஆகிய கைத்தொழில்கள் அதிகளவில் இங்கு பரவிக் காணப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக  பிதேசத்தில்  மேலும் தொழில் வாய்ப்புக்களை  உருவாக்கும் முக்கிய கேந்திர நிலையமாக பால் உற்பத்தி நடவடிகைகளை சுட்டிக்காட்ட  முடியும். பிரதேச செயலாளர் பிரிவினுள்  உற்பத்தி செய்யப்படும் பால், நெஸ்லே, மில்கோ, தென்னை முக்கோணம் ஆகிய பல்வேறு நிறுவனங்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றன. பிரதேசத்தில் சுமார் 90% மானவர்கள் நெற்பயிர்ச் செய்கையில்  ஈடுபடுகின்றார்கள் என்பதுடன் நெற்பயிர்ச் செய்கையானது சிறு போகம், பெரும் போகம் ஆகிய இருபோகங்களிலும் இடம் பெறுகின்றது.       

 

இப்பிரிவினுள் பிரதான நகரமொன்றுமில்லை. அண்மையில் உள்ள நகரங்களாக குளியாப்படிய, நாரம்மல என்பவற்றைக் குறிப்பிடலாம்.  கட்டுப்பொத்த நகரத்தில் ஒரு பகுதி இந்த பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்டு அமைந்துள்ளது. பிஹல்பொல, நக்காவத்த, ஹொரம்பாவ, சியம்பலாகஸ் கொடுவ, கல்கமுல்ல, அறக்கியால  ஆகிய கிராமங்கள் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் கிராமங்களாக விளங்குகின்றன. கமநல சேவை  நிலையங்கள் மூன்றிற்குறித்துடையதாக  இப் இப்பிரதேச செயலாளர்பிரிவு விளங்கு கின்றது.    அதில்  ஹொரம்பாவ கம நலசேவை மத்திய நிலையம் இப் பிரதேச செயலாளர்பிரிவில் அமைந்துள்ளது. கித்தலவ மற்றும் வெவகம ஆகிய கமநல சேவை மத்திய நிலையங்கள் குளியாப்படி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவினுள் அமைந்துள்ளன. 

 

இப் பிரதேச செயலகப் பிரிவிவின்  சனத்தொகை தொடர்பில் கவனம் செலுத்தினால் முஸ்லீம்களின் சனத்தொகை இப்பிரிவினுள் பரந்து காணப்படுகின்றது. தற்போது இப் பிரதேச செயலகப்பிரிவின்  சனத்தொகை யில் 19529 பேர் முஸ்லீம்களாவர். இவர்கள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு மேலதிகமாக  தல்லியத்த கிராம நிலதாரிப்பிரிவில்  மானாவ எனும் பெயரையுடைய கிராமத்தில்  விஷேடமான ஒரு குழுவினரான காடி வம்சத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். பிரம்பினைப் பயன்படுத்தி தமது உற்பத்திப் பொருட்களைச் செய்கின்ற இவர்கள் கிராமம் கிராமமாகச் சென்று தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். அதற்கு மேலதிகமாக சாஸ்திரம் சொல்வதினூடாகவும் தமது ஜீவனோபாயத்தை  தேடும் வழியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். தற்காலத்தில் இந்த இனத்தவர்களின் வாழ்கை முறையும் மாற்றமடைந்துள்ளது வியாபார நடவடிக்கைகள், கல்வி, மற்றும் விவசாய நடவடிகைகள், என்பவற்றின் பால் சார்ந்திருப்பதோடு சம்பிரதாயப் பூர்வமாக அவர்கள் மேற்கொண்டுவந்த விடயங்கள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.  




குளியாப்பிடிய  கிழக்கு  பிரதேசப்பிரிவாகப் பிரகடனப்படுத்தப்படல் 

                             குளியாப்பிடி கிழக்குப்பிரதேச செயலாளர் பிரிவு வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் குளியாப்பிடி மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிறுவாகத்தினுள் கிராம நிலதாரிப் பிரிவுகள் 113 காணப்பட்டன. இந்நிலையில் நிர்வாக இலகு கருதி குளியாப்பிடி மேற்கு மற்றும் குளியாப்பிடி கிழக்கு என இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரிந்து வேறாக்கப்பட்டது. 1990 காலத்தினுள்  நக்காவத்த தேசிய பாடசாலைக்குறித்தான காணியில் குளியாப்பிடி மேற்கு பிரதேச செயலாளர் காரியாலயத்தின்  உப காரியாலயமொன்றாக இக் காரியாலயம் அமையப் பெற்றது. 

அக்கால கட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நிர்வாக மறு சீரமைப்பு அமைச்சரும் இலங்கை பாராளுமன்ற சபைத்தலைவருமான பேராசிரியர்  திரு.ரிச்சட் பத்திரன அவர்களின் முன்மாதிரியான  எண்ணக் கருவின் அடிப்படையில் மக்கள் ஆணைக்கு  பிரதான இடத்தை வழங்கி நிர்வாகத்தை மக்களுக்கு மத்தியில் கொண்டு செல்லும் முன்மாதிரியை செயற்படுத்தும் நோக்கில் பிரதேச செயலகங்களை நிறுவுதல் என்ற செயற்திட்டத்தின் கீழ் இரு மாடிகளைக் கொண்ட  கட்டடமொன்றை அமைத்து அங்கசம்பூர்ணமான பதவினர்களுடன் 2001 ஆம் வருடம் மே மாதம் 18 ஆம் திகதி பிரதேச  செயலகமாக  விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்  லக்ஸ்மன் கிரியல்ல அவர்களினால் இக் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு முதலாவது பிரதேச செயலாளராக ஆர்.ஏ.பீ ரூபசிங்க அவர்கள் விளங்கினார் என்பதுடன்  இதுவரை 09 பிரதேச செயலாளர்களால்  இங்கு கடமைகள்  மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  தற்போதைய பிரதேச செயலாளரான திருமதி. டீ. எச். எம்.என். பீ தஸநாயக்க அவர்கள் 2017 ஆம் வருடம் முதல் கடமைகளைப் பொறுப்பேற்று  இதுவரை  தனது கடமைகளை நிறைவேற்றிவருகிறார். 

 குளியாப்பிட்டிய - கிழக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகம் இதுவரை

சேவை எண் பெயர்- பிரதேச செயலகம் நிர்வாக காலம்
1 ஆர்.ஏ.பி.பி. ரூபசிங்க 1990
2 APKநெலும்தெனியா 1990 ஆகஸ்ட்
3 சந்திரா ஏகநாயக்க 1991 அக்டோபர்
4 டி.எம்.ஜி.பி. தசநாயக்க 1991 டிசம்பர்
5 எச்.எம். மாதானந்த நிலமே 1992 மார்ச்
6 ஏ.வி. அமரசிறி 1992 ஆகஸ்ட்
7 ஏ.டபிள்யூ. அபேசேகர 1998 -ஜூன்
8 ஏ.டி. அமரசிறி 2003 மார்ச்
9 ஆர்.ஏ.பி.பி. ரூபசிங்க 2007 ஆகஸ்ட்
10 எச்.எல்.எஸ். விஜேசிங்க 2008 ஆகஸ்ட்
11 டி.எச்.எம்.என்.பி.சநாயகே 2017 -2020
12 டி.பி.எஸ். குமாரா 2021-2025
13 டபிள்யூ. திலானி நிசான்சலா சில்வா                             2025 முதல் தற்போது வரை
Scroll To Top