அனுமதிப் பத்திரங்களின் வகைகள்
- மரம் வெட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல். (பலா மரங்கள் / “உள்நாட்டு ஈரப்பலா” மரங்கள் / பெண் பனை மரம்)
- மரம் / மரத்தளபாடங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்குதல்.
- மரம் வெட்டுவதற்கான அனுமதிப் பத்திரத்தின் காலத்தினை நீத்தல்.
- புதிய அடகு மையங்களை திறக்க அனுமதிப் பத்திரம் வழங்குதல்.
- அடகு மையங்களின் அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்.
- சுங்கவரி அனுமதிப் பத்திரம் வழங்குதல்.
- விழாக்களில் மதுபானம் வைத்திருப்பதற்கான அனுமதி வழங்கள்.
- விலங்குகளை வாகனத்தில் எடுத்து செல்வதற்கான அனுமதி வழங்குதல்.
- துப்பாக்கி வைத்திருக்க அனுமதிப்பதற்கான பரிந்துரை.
- தென்னங் கள்ளு தயாரிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல்.
- வணிக மற்றும் வணிகமல்லாத நோக்கங்களுக்காக மணல் கற்கள் மற்றும் மணல் அகழ்வாராய்ச்சி மற்றும் போக்குவரத்து.
மரம் வெட்டுவதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல். (பலா மரங்கள் / “உள்நாட்டு ஈரப்பலா” மரங்கள் / பெண் பனை மரங்கள்)
- சான்றிதனை் மூலப் பிரதி மற்றும் கிராம சேவகர் மூலம் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்ட காணி பத்திரத்தின் பிரதி.
- விண்ணப்பதாரருக்கு காணி உரிமை தெளிவாக இல்லாத பட்சத்தில், கிராம சேவகர் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காணி உரிமையாளரின் விருப்ப கடிதம், பல வாரிசுகள் இருக்கும்போது விண்ணப்பதாரருக்கு வழங்குவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நிரூபிக்கும் வாக்கு மூலம்.
- ஒரு புதிய கட்டுமானத்துக்காக மரங்களை அகற்றுவதற்கு பொருத்தமான கட்டுமானத் திட்டம்.
- அபாயங்கள் காரணமாக மரத்தை அகற்றுவதாயின் பிரதேச சபைகள் / நகர சபைகளின் கடிதங்கள்.
- நிலம் சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகள் சம்பந்தப்பட்டிருந்தால் மரத்தை அகற்ற அவற்றுடன் தொடர்புடைய நீதிமன்ற உத்தரவுகள்.
- மின்சாரக் கம்பித் தடங்கள் தொடர்பான இடைஞ்சல்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் அது பற்றி அறிவித்தமை தொடர்பான கடிதம்.
- வேலி எல்லையில் மரம் அமைந்திருந்தால் பக்கத்து (எல்லை) உரிமையாளர் குறிப்பிட்ட மரத்தை அகற்ற எதிர்க்கவில்லை என கிராம சேவகர் உறுதிப்படுத்திய கடிதம்.
- அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணம் - ரூ. 168.00
மரம் / மரத்தளபாடங்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்குதல்
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
- மரக்கட்டைகள், மரத்துண்டுகள், மரம் அல்லது தளபாடம் பற்றிய கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
- பலா/ ஈரப் பலா/ பல்மைரா மரங்களை வெட்டுவதற்கான அனுமதிப்பதிரம்.
- கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்ட மரத்தை துண்டு பண்ணுவதற்கான அனுமதிப்பதிரம்.
- வனதள பரிந்துரை.
- ரயில் மூலம் மரம் அல்லது தளபாடத்தை எடுத்துச் செல்லும் போது போக்குவரத்திக்கான அசல் அனுமதி மற்றும் ரயில் துறை வழங்கும் அதிகாரப்பூர்வ ரசீது. (வனதள பரிந்துரை, கிராம சேவகர் பரிந்துரைத தேவைப்படாத அதேவேளை உரிம கட்டணம் அறவிடப்பபடமாட்டாது.)
- மர தண்டுகள் , துண்டு மரம் அல்லது தளபாடம் ஆகியவற்றிற்கான கொள்வனவு செய்தமைக்கான ரசீது.
மரம் வெட்வதற்கான அனுமதிப் பத்திரக் காலம் நீடிப்பு
- போலீஸ் புகாரின் மூலப்பிரதி.
- அனுமதிப் பத்திரத்தின் மூலப்பிரதி.
- வாகனத்தில் எடுத்துச் செல்லாத பட்சத்தில் கிராம சேவகரின் சான்றிதழ்.
புதிய அடகு மையங்களை திறக்க அனுமதிப் பத்திரம் வழங்குதல்
- கிராம உத்தியோகத்தரின் அறிக்கை.
- பொலிஸ் அதிகாரியின் அறிக்கை.
- நிறுவனங்களை இணைத்தல் பதிவு சான்றிதழின் மூலப்பிரதி மற்றும் நிழற்பிரதி.
- சட்டத்தை மீறல் மற்றும் ஒழுங்கற்ற செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என்ற வாக்குமூலம்.
- தீ மற்றும் கொள்ளையிடலிலிருந்து பாதுகாக்கும் காப்புறுதிச் சான்றிதழின் மூலப்பிரதியும் நகல்பிரதியும்.
- கூட்டு வியாபாரம் எனின் கூட்டு ஒப்பந்தம்.
- வரிப் பத்திரத்தின் பிரதி.
- அனுமதிப் பத்திரக் கட்டணம் - ரூ. 1000,00
- பிணை - ரூ .100000.00
- பதிவுக் கட்டணம் - ரூ. 25,000.00
அடகு மையங்களின் அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பித்தல்
- கடந்த ஆண்டின் உரிமம் மற்றும் நிழற்பிரதியொன்று.
- ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு பிரதி.
- குறித்த ஆண்டின் நிதி அறிக்கை மற்றும் அதன் பிரதி.
- வாக்குமூலம்.
- அனுமதிப் பத்திரக் கட்டணம் - ரூ. 1000,00
வாகன வருமான உத்தரவுப் பத்திரம் வழங்குதல்
- பதிவு சான்றிதழ் அல்லது மோட்டார் வாகனங்கள் பதிவுத் திணைக்களத்தினால் வெளியிட்ட C.M.T. அல்லது 76 M.T.A.11 படிவம்.
- காப்புறுதிச் சான்றிதழ்.
- கடைசியாக பெற்ற உத்தரவுப் பத்திரம்.
- புகைச் சோதனை அறிக்கை
மதுபான விற்பனைக்கு புதிய அனுமதிப் பத்திரம் வழங்கல்.
- சுங்கவரி ஆணையாளரால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதம். (வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட கட்டணம்).
மதுபான விற்பனை அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தல்.
- சுங்கவரி ஆணையாளர் வழங்கிய அனுமதிக் கடிதம்.
- உதவிச் சுங்கவரி ஆணையாளர் வழங்கிய சான்றிதழ்.
- உள்நாட்டு வருமான ஆணையாளர் மற்றும் மாகாண வருமான ஆணையாளர் ஆகியோரால் சுங்கவரி செலுத்தியமை தொடர்பாக வெளியிடப்பட்ட சான்றிதழ் மற்றும் அதன் பிரதியொன்றும்.
- கடந்த ஆண்டு அனுமதிப்பத்திரம். (வர்த்தமானி அறிவிப்பின் படி விகிதங்கள் மாறுபடும்.)
{sliderவிழாக்களில் மதுபானம் வைத்திருப்பதற்கான அனுமதி. |closed}
- அழைப்பு அட்டை.
- கோரிக்கைக் கடிதம்.
- கிராம உத்தயோகத்தரின் அறிக்கை.
தென்னங் கள்ளு தயாரிப்பதற்கான அனுமதிப் பத்திரம் வழங்குதல்.
- முழுமையான டெண்டர் விண்ணப்பம்.
- மதிப்பு சான்றிதழின் மூலப்பிரதி.
- டெண்டர் விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளும் போது கிடைக்கும் ரசீதின் மூலப்பிரதி.
















